சூர்யாநடிப்பில்வெளியானபடம், தானாசேர்ந்தகூட்டம். இப்படத்தில் சூர்யாவும் அவரது கூட்டமும் சிபிஐ அதிகாரிகளாக வேஷமிட்டு கொள்ளையில் ஈடுபடுவர். அதேபோல்ஒரு சம்பவம் மஹாராஷ்டிராவில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வைல் பார்லே பகுதியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்தநிலையில், கடந்த புதன்கிழமை (17.02.2021) சிலர்போலீஸ் அதிகாரிகளாக வேஷமிட்டு ஹோட்டலில் சோதனை நடத்தினர்.
மேலும், இந்தச் சோதனையின்போது 12 கோடிரூபாயைப் பறிமுதல் (கொள்ளையடித்து) செய்து சென்றுள்ளனர். அதன்பிறகு ஹோட்டலில்சோதனைநடத்தியவர்கள் போலி அதிகாரிகள் எனத் தெரியவந்ததும் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து ஹோட்டலில்உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்து, போலி அதிகாரிகளை மும்பைகாவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் இந்தச் சம்பவம்தொடர்பாக, 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.