Advertisment

6 மாதங்களுக்கு பிறகு நாளை திறக்கப்படும் திரையரங்குகள்...

 Theaters that open tomorrow after 6 months

கரோனா பொது முடக்கம் காரணமாகமூடப்பட்ட திரையரங்குகள் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஆறு மாதங்களுக்குப் பிறகு நாளை திறக்கப்பட இருக்கிறது.

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக தற்பொழுது வரை தொடர்ந்து வரும் நிலையில், இடையிடையே மத்திய,மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளையும் அறிவித்து வந்தனர். இந்நிலையில் ஐந்தாம் கட்ட தளர்வில் அக்டோபர் 15ம் தேதி முதல் திரையரங்குகளை திறப்பதற்கான அனுமதி அளிக்கப்பட்டது.

Advertisment

அதேபோல் திரையரங்குகள் திறக்கப்படுவதற்காக வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் புதுச்சேரி, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நாளை திறக்கப்படுகின்றன. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி 50 சதவீதபார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான முன்னெடுப்பு பணிகளை ஏற்கனவே திரையரங்கு உரிமையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

corona virus theater
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe