Advertisment

மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சருக்கு நன்றி- திருச்சி சிவா 

உலகையேஅச்சுறுத்திவரும் கரோனாபாதிப்பு காரணமாகமலேசியா தலைநகர் கோலாலம்பூரில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் அனுப்பப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை குறித்து மாநிலங்களவை திருச்சி சிவாகூறியுள்ளதாவது,

Advertisment

Thanks to Union Minister for rescuing students - Trichy Siva

கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் மணிலாவைச் சேர்ந்த மாணவர்களைப் பற்றி அவர்களது உறவினர்களிடமிருந்து அறிந்து கொண்டநான் வெளிவுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் சுப்பிரமணியத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன், இந்தச் செயல்பாட்டில் சில தடைகள் இருந்தபோதிலும் மாணவர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான உதவி வழங்கப்படும் என்று அவர் எனக்கு உறுதியளித்தார்.

ஏர் இந்தியா விமானம் மூலம் மாணவர்களை மீட்டு அவர்களை டெல்லி மட்டும் விசாகப்பட்டினத்திற்கு கொண்டு வர மத்திய அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். அவரது உடனடி தலையீடு மற்றும் செயலுக்கு அவருக்கு எனது மனமார்ந்த நன்றி எனக்கூறியுள்ளார்.

Advertisment

மலேசியாவில் சிக்கிக் கொண்டிருக்கும் 200 இந்திய மாணவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 150 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

Central Government corona virus siva
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe