பாஜகவுக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி - மோடி தமிழில் ட்வீட்!

hjk

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் கடந்த 12ஆம் தேதி வெளியானது. தேர்தல் முடிவுகளில்90 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களை திமுக கைப்பற்றியது. குறிப்பாக மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 98 சதவீத இடங்களை திமுக பெற்றது. வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இன்று (20.10.2021) பதவியேற்க உள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக இந்திய பிரதமர் மோடி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி. அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

local body election modi
இதையும் படியுங்கள்
Subscribe