வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும்விவசாயிகளைநேரில் சந்திக்க திட்டமிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று, அவர்களுக்குத் தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுல் காந்தி உள்படதிமுக, தேசிய மாநாட்டு கட்சி, சிவசேனா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், திமுக சார்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில்,
''இதுபோன்ற சட்டங்களைநிறைவேற்றுவது இந்தியா இதுவரை கண்டிராத மோசமான ஒரு நிலைமை. கடந்த இரண்டு வாரத்தில் மூன்றேபிரச்சனைகளைத்தான்பராளுமன்றத்தில்முன்வைத்துள்ளோம். விவசாயிகள் பிரச்சனை, பெகாசஸ் பிரச்சனை, விலைவாசி பிரச்சனை. இது மூன்றை மட்டும்தான்எங்களுடைய கோரிக்கை. தனிப்பட்ட முறையில் தமிழ்நாட்டை பொறுத்தவரை மேகதாது பிரச்சனை, நீட் தேர்வு பிரச்னைஇதையெல்லாம் ஜீரோ ஹவரில்பேசலாம் அல்லது வெவ்வேறு தலைப்பில் பேசலாம். ஆனால் நீண்ட விவாதம் என்ற முறையில் இந்த மூன்றை மட்டும்தான்வலியுறுத்தினோம். ஆனால் இந்த அரசாங்கம் எதிரிக்கட்சிகளைமதிப்பதில்லை. பாராளுமன்ற நடைமுறைகளைபின்பற்றுவதில்லை. இது நமது ஜனநாயகத்திற்கு ஒரு சோதனை காலம்''என்றார்.