hgghhhg

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் இதுவரை 12 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர். பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற இரண்டு வாகனங்களின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர் என்றும், மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷி முஹமத் இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டுள்ளது.

Advertisment