/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fire-ni.jpg)
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரில் உள்ள அன்குரா என்ற பெயரில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. 8 மாடிகளைக் கொண்ட இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (23-12-23) இந்த மருத்துவமனையின் 6வது மாடியில் திடீரென்று தீப்பற்றியது. அதன் பின்னர், சில நிமிடங்களிலேயே மருத்துவமனை முழுவதும் தீப்பிடித்து பற்றி எரிந்தது. தீ விபத்தைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தீயணைப்புத்துறையினருக்குத்தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர். இதையடுத்து, இந்த தீ விபத்தில்ஏதேனும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாஅல்லது எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறித்து இன்னும் எந்தவித தகவலும் வெளியாகவில்லை. மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)