/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fireee-ni.jpg)
மத்தியப் பிரதேச மாநிலம், ஹர்தா நகரில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று (06-02-24) திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால், ஆலையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடிக்கத்தொடங்கின. இந்த பயங்கர விபத்தில் பலரும் சிக்கிப்படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், பலமணி நேரப் போராட்டத்திற்குப் பின்தீயை அணைத்தனர். இதனையடுத்து, விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த பயங்கர தீ விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்ததாகவும், 50 பேர் படுகாயமடைந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாகப் பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் பலரும் வேதனை அடைந்துள்ளனர். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் உதவி வருகிறது. இந்த கோர விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)