Advertisment

நிகழ்ச்சி அரங்கில் பயங்கர தீ விபத்து...

A terrible fire broke out in the theater...

டெல்லியில் நிகழ்ச்சிகள் நடைபெற இருந்த அரங்கம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் பத்துக்கு மேற்பட்ட வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

டெல்லி ரோகினி செக்டர் 3 பகுதியில் இருக்கக் கூடிய கார்கிரேட் என்ற விருந்து மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. லேசாக பிடித்த தீயானது தற்பொழுது மளமளவென கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதுகுறித்து தகவலறிந்து முதற்கட்டமாக மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்ற நிலையில், தீ கட்டிடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியதால் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் குவிக்கப்பட்டு தீயானது அணைக்கப்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக தற்பொழுது வரை யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் ஏற்பட்ட இந்த பெரும் தீ விபத்து காரணமாக அந்த பகுதியே புகையால்சூழ்ந்துள்ளது.

Advertisment

Delhi diwali fire
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe