
தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மத்தியபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் இயங்கி வந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தீயானது அனைத்து பகுதிகளுக்கும் பரவி வரும் நிலையில் தீயணைப்புத் துறையினர் தீயைப் போராடி அணைத்து வருகின்றனர். மேலும் அந்த மருத்துவமனையில் பிற்பகுதிகளில் உள்ள நோயாளிகள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். சுமார் 10 மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்தியபிரதேச முதல்வர், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
Follow Us