டெல்லியில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள தனியார்குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று இரவுதிடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் மருத்துவமனையில் உள்ள 12 குழந்தைகள் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஆறு குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மீதமுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீவிபத்து தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. விபத்து சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.