ஆந்திரமாநிலம் கிருஷ்ணாமாவட்டத்தைச்சேர்ந்தவர்பிஜிலி ஜமாலயா. இவருக்குவயது 52. பன்றி வளர்ப்பு தொழில் செய்து வரும் இவருக்குசொந்தவீடு கட்ட வேண்டும் என்பதேகனவு.
வங்கி கணக்கு இல்லாத இவர், தனதுகனவைநினைவாக்கசம்பாதித்தப் பணத்தைப் பத்திரமாக வைத்திருக்க எண்ணி,வீட்டிலேயே இரும்பு பெட்டி ஒன்றில்சேமித்து வந்துள்ளார். இவ்வாறு ஐந்து லட்சம் வரை அப்பெட்டியில் சேமித்துள்ளார். இந்தநிலையில் தனதுதொழிலில்முதலீடு செய்வதற்காக, அச்சேமிப்புதொகையிலிருந்து ஒரு லட்சத்தைஎடுப்பதற்காக இரும்பு பெட்டியைத் திறந்தபோது அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.
சொந்தவீடு கட்ட அவர் சேர்த்துவைத்திருந்தப் பணத்தைக் கரையான்கள் அரித்திருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தரையில்விழுந்து கதறி அழுதார். பிறகு கரையான்கள் அரித்த நோட்டுகளை, அப்பகுதி குழந்தைகளுக்கு அளித்துள்ளார். குழந்தைகளின் கையில் பணத்தைப் பார்த்தவர்கள், காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.