Skip to main content

கரையான்களால் பறிபோன கனவு - கதறிய வியாபாரி!

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

MONEY EATEN BY TERMITES

 

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிஜிலி ஜமாலயா. இவருக்கு வயது 52. பன்றி வளர்ப்பு தொழில் செய்து வரும் இவருக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதே கனவு.

 

வங்கி கணக்கு இல்லாத இவர், தனது கனவை நினைவாக்க சம்பாதித்தப் பணத்தைப் பத்திரமாக வைத்திருக்க எண்ணி, வீட்டிலேயே இரும்பு பெட்டி ஒன்றில் சேமித்து வந்துள்ளார். இவ்வாறு ஐந்து லட்சம் வரை அப்பெட்டியில் சேமித்துள்ளார். இந்தநிலையில் தனது தொழிலில் முதலீடு செய்வதற்காக, அச்சேமிப்பு தொகையிலிருந்து ஒரு லட்சத்தை எடுப்பதற்காக இரும்பு பெட்டியைத் திறந்தபோது அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.

 

சொந்த வீடு கட்ட அவர் சேர்த்து வைத்திருந்தப் பணத்தைக் கரையான்கள் அரித்திருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தரையில் விழுந்து கதறி அழுதார். பிறகு கரையான்கள் அரித்த நோட்டுகளை, அப்பகுதி குழந்தைகளுக்கு அளித்துள்ளார். குழந்தைகளின் கையில் பணத்தைப் பார்த்தவர்கள், காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆளும்கட்சி எம்.எல்.ஏவுக்கு சவால்; ஒரு பக்க மொட்டை, மீசையை எடுத்த டிரைவர்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
The driver challenged the YSR party MLA

ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் உள்ளது புட்டபர்த்தி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்  ஸ்ரீதர் ரெட்டி. அரசியல்வாதியான இவர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயலாற்றி வருகிறார். அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்த இவருக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக புட்டபர்த்தி தொகுதியில் சீட் கொடுத்துள்ளனர். அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், அந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இதன் காரணமாக ஸ்ரீதர் ரெட்டி இந்தத் தொகுதியில் மக்கள் செல்வாக்கு மிக்க நபராக இருந்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, ஸ்ரீதர் ரெட்டிக்கு ஏராளமான பணியாளர்கள் இருந்துள்ளனர். அதில், கார் ஓட்டுநராக பங்கர்ராஜூ மகேஷ்வர் ரெட்டி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீதர் ரெட்டியிடம் வேலை பார்த்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த டிரைவர், ஸ்ரீதர் ரெட்டி மீது மிகுந்த விசுவாசமாகவும், மரியாதையாகவும் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், திடீரென ஒரு சில காரணத்தால் எம்.எல்.ஏ ஸ்ரீதர் ரெட்டிக்கும் ஓட்டுநர் பங்கர்ராஜூ மகேஷ்வர் ரெட்டிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரிடம் இருந்து திடீரென வேலையை விட்டு நின்றுள்ளார் ஓட்டுநர். இது குறித்து அவரின் நண்பர்கள் சிலர் டிரைவரிடம் கேட்டபோது, சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீதர் ரெட்டி மிகவும் மோசமானவர் என்றும், அவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அந்தப் பகுதியில் உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளிடமும் ஸ்ரீதர் ரெட்டியால் தான் ஏமாற்றப்பட்டதாகவும் அவர் நல்லவர் இல்லை எனவும் கூறியிருக்கிறார்.

இதனால், சில சமயம் ஸ்ரீதர் ரெட்டியின் ஆதரவாளருக்கும் இவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், சட்டமன்ற உறுப்பினரான ஸ்ரீதர் ரெட்டியை கடுமையாக விமர்சிக்கும் போதெல்லாம், இவரால் நான் மட்டும் பாதிக்கப்படவில்லை எனவும், ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியிருக்கிறார். ஆனால், இதனைக் கேட்டு எரிச்சலடைந்த இவரின் நண்பர்கள் சிலர், எம்.எல்.ஏ.வை எதிர்த்து உன்னால் ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், ஸ்ரீதர் ரெட்டி மீது நீ என்னதான் குறை சொன்னாலும் மறுபடியும் அவர்தான் இந்தத் தொகுதிக்கு எம்.எல்.ஏ ஆவார் என்றும் கூறியிருக்கின்றனர். இதனால் கடுப்பான ஓட்டுநர் மகேஷ்வர் ரெட்டி, இந்தத் தொகுதியில் கண்டிப்பாக இவருக்கு மறுபடியும் சீட் கொடுக்க மாட்டார்கள் எனக் கூறியிருக்கிறார். ஆனால், இவர் சொல்வது எதுவும் நடக்காது என அவரின் நண்பர்கள் அலட்சியப்படுத்தியுள்ளனர். அப்போது ஆவேசமான மகேஷ்வர் ரெட்டி, மறுபடியும் புட்டபர்த்தி தொகுதியில் ஸ்ரீதர் ரெட்டிக்கு சீட் கொடுத்துவிட்டால் நான் ஒரு பக்கம் மொட்டையடித்துக் கொள்கிறேன் எனவும், ஒரு பக்கம் மீசையை எடுத்துக் கொள்கிறேன் எனவும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இதனை நான் உறுதியாகத்தான் சொல்கிறேன் என உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது. அந்தப் பட்டியலில் ஸ்ரீதர் ரெட்டிக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த ஓட்டுநர், அவர் சவால் விட்டது போன்று புட்டபர்த்தியில் உள்ள சத்தியம்மா கோயில் முன்பு பாதி மொட்டையடித்துக் கொண்டார். மேலும், பாதி மீசையையும் எடுத்துக் கொண்டார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, ஸ்ரீதர் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும், அவர் வெற்றி பெற்றால் தன்னைப் போல் மேலும் பலர் ஏமாற்றப்படுவார்கள் என்றும் ஆக்ரோஷமாக கூறியிருக்கிறார். இந்நிலையில், டிரைவர் மகேஷ்வர் ரெட்டி பாதி மொட்டையடித்து பாதி மீசை எடுத்துக்கொண்டு பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு நினைவுத் தூண்! - திறந்து வைத்த ஆளும்கட்சி வேட்பாளர்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Sandalwood smuggling in Andhra Pradesh is a memorial to Veerappan

ஆந்திர மாநிலம் – சித்தூர் மாவட்டம் – குப்பம் சட்டமன்றத் தொகுதியானது, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதியாகும். பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு 8வது முறையாக இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில், சித்தூர் மாவட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர மேல்சபை உறுப்பினரும், குப்பம் சட்டமன்றத் தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான பரத் போட்டியிடுகிறார். குப்பம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள சாந்திபுரம் அருகே சந்தனக் கடத்தல் வீரப்பனின் போட்டோவுடன் கூடிய நினைவுத் தூண் ஒன்றை சிலர் நிறுவியுள்ளனர்.

Sandalwood smuggling in Andhra Pradesh is a memorial to Veerappan

அந்தப் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பரத், வீரப்பன் நினைவுத்தூணைத் திறந்து வைத்து சிரித்தபடியே போட்டோவுக்கும் போஸ் கொடுத்துள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா காவல்துறையினருக்கு முன்பு சிம்ம சொப்பனமாக இருந்து, காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனின் நினைவுத்தூணை ஆளும்கட்சியின் மேல்சபை உறுப்பினரான பரத்  திறந்து வைத்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.