style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் ஏராளமான தொழிலாளர்கள் துப்புரவு பணி, பாதுகாவலர் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் திடீரென பணியில் இருந்து நீக்கிவிட்டு தனியார் ஒப்பந்ததாரர்கள் புதிய நபர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தியுள்ளனர்.
அதனால் வேலை இழந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தனியார் ஒப்பந்ததாரர்களை கண்டித்தும், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரியும் ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் தொழிலாளி சரசு என்பவர் திடீரென தான் மறைத்து வெத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் போது பெண் ஊழியரின் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.