
மத்திய அரசின்வேளாண்சட்டங்களுக்கு எதிராகபோரட்டம்நடத்தி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்றுட்ராக்டர்பேரணி நடத்தினர். இதில்வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து சிலவிவசாய அமைப்புகள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தன. இருப்பினும் பல்வேறு விவசாயஅமைப்புகள் போராட்டத்தைதொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் விவசாயிகள் முகாமிட்டுள்ள சிங்குஎல்லையில், நூற்றுக்கணக்கானோர் கூடி, தாங்கள் உள்ளூர்வாசிகள் என்றும், விவசாயிகள் போராட்டத்தால் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது என்றும்அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இவர்கள், விவசாயிகளின் டென்ட்களைக் கிழிக்கமுற்பட்டனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகளும், அவர்களுக்கு எதிராகபோராடியவர்களும் ஒருவரைஒருவர் கல் வீசி தாக்கிக்கொண்டனர்.
இதனையடுத்து போலீஸார்தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் நிலைமையைக் கட்டுக்குள்கொண்டுவந்தனர். இந்தக் கலவரத்தில் டெல்லிபோலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
Follow Us