
ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் பயங்கரவாதிகள் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் ராணுவ வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீர் ரஜோரி அருகே உள்ள ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் இன்று எதிர்பாராத விதமாகத் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்ததோடு இரண்டு பயங்கரவாதிகளும்உயிரிழந்துள்ளனர். தற்பொழுது வரை அங்குத் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் எல்லையில் பயங்கரவாத தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)