திரிணாமூல் காங்கிரஸில் இணைந்த இந்திய டென்னிஸ் நட்சத்திரம்!

leander paes

மேற்கு வங்கத்தில் ஆட்சியைத்தக்க வைத்துக்கொண்டுள்ளதிரிணாமூல்காங்கிரஸ், தனது கிளைகளைப் பல்வேறு மாநிலங்களில் பலமாக நிறுவ முயற்சி மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில், கோவா மாநிலத்தையும் திரிணாமூல்குறிவைத்து வருகிறது.

இந்தச் சூழலில் கோவாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி, மம்தா பானர்ஜி நேற்று (28.10.2021) அம்மாநிலத்தில்தனது மூன்றுநாள்சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இந்தநிலையில், கோவாவந்துள்ள மம்தா முன்னிலையில், இந்தியாவின் சிறந்த டென்னிஸ் வீரர்களில்ஒருவராக அறியப்படும்லியாண்டர் பயஸ்திரிணாமூல்காங்கிரஸில் இணைந்துள்ளார். அவர் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திரிணாமூல் சார்பாக போட்டியிடுவார்என எதிர்பார்க்கப்படுகிறது.

லியாண்டர் பயஸ் கட்சியில் சேரும்போதுபேசிய மம்தா பானர்ஜி, அவர் தனக்கு தம்பி போன்றவர் என தெரிவித்துள்ளார். முன்னதாக மம்தா பானர்ஜி, கோவாவில் தான் முதல்வராக வரவில்லை எனவும், இனி டெல்லியின் அடாவடி இங்கு இருக்காது எனவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Goa leander paes Mamata Banerjee
இதையும் படியுங்கள்
Subscribe