Skip to main content

திரிணாமூல் காங்கிரஸில் இணைந்த இந்திய டென்னிஸ் நட்சத்திரம்!

Published on 29/10/2021 | Edited on 29/10/2021

 

leander paes

 

மேற்கு வங்கத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ள திரிணாமூல்காங்கிரஸ், தனது கிளைகளைப் பல்வேறு மாநிலங்களில் பலமாக நிறுவ முயற்சி மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில், கோவா மாநிலத்தையும் திரிணாமூல் குறிவைத்து வருகிறது.

 

இந்தச் சூழலில் கோவாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி, மம்தா பானர்ஜி நேற்று (28.10.2021) அம்மாநிலத்தில் தனது மூன்றுநாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இந்தநிலையில், கோவா வந்துள்ள மம்தா முன்னிலையில், இந்தியாவின் சிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவராக அறியப்படும் லியாண்டர் பயஸ் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார். அவர் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திரிணாமூல் சார்பாக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

லியாண்டர் பயஸ் கட்சியில் சேரும்போது பேசிய மம்தா பானர்ஜி, அவர் தனக்கு தம்பி போன்றவர் என தெரிவித்துள்ளார். முன்னதாக மம்தா பானர்ஜி, கோவாவில் தான் முதல்வராக வரவில்லை எனவும், இனி டெல்லியின் அடாவடி இங்கு இருக்காது எனவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

விரைவில் அமலுக்கு வரும் புதிய திட்டம்; பிரதமருக்கு மம்தா பரபரப்பு கடிதம்

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Mamata letter to Prime Minister for new criminal laws

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்தியச் சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சட்டங்கள்தான் இப்போது வரை அமலில் இருந்தன. இதற்கிடையே, இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் மாற்றப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன.

அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் என்பதை ‘பாரதிய நியாய சன்ஹிதா சட்டம்’ எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை ‘பாரதிய நாகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா’ எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை ‘பாரதிய சாக்சியா’ எனவும் பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் 3 மசோதாக்களையும் தாக்கல் செய்தார். 

இதையடுத்து, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளுடன் கூடிய புதிய குற்றவியல் மசோதாக்களை கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி மத்திய உள்துறை அமித்ஷா மீண்டும் தாக்கல் செய்தார். மக்களவையில் 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த 3 குற்றவியல் மசோதாக்களும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த 3 புதிய குற்றவியல் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த திட்டத்தை நிறுத்தி வைக்கக் கோரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், ‘உங்களது அரசாங்கம் இந்த மூன்று முக்கியமான மசோதாக்களை ஒருதலைபட்சமாகவும், எந்த விவாதமும் இல்லாமலும் நிறைவேற்றியது. அன்று, கிட்டத்தட்ட 100 மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இரு அவைகளின் மொத்தம் 146 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஜனநாயகத்தின் அந்த இருண்ட நேரத்தில் எதேச்சதிகாரமான முறையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. எனவே, இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் தேதியை ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த அணுகுமுறை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு முன்மொழியப்பட்டதை முழுமையாக ஆராய வாய்ப்பளிக்கும். மேலும், குற்றவியல் சட்டங்களை மீண்டும் நாடாளுமனறத்தில் மறு ஆய்வு செய்ய உதவும். எங்கள் வேண்டுகோளை பரிசீலிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். 

Next Story

“பிரதமர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்” - மம்தா பானர்ஜி அதிரடி

Published on 04/06/2024 | Edited on 04/06/2024
Mamata Banerjee  said Prime Minister should resign immediately

இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மாலை 6 மணியளவிலான நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 293 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 232 இடங்களிலும், மற்றவை 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இந்தியா கூட்டணியில் இருக்கக்கூடிய மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிட்டது. 42 தொகுதிகள் கொண்ட அம்மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவில், திரிணாமுல் காங்கிரஸ் 29 இடங்களிலும், பா.ஜ.க 12 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது. 

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இன்று (04-06-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பிரதமருக்கு பெரும்பான்மை கிடைக்காதது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். ஏனென்றால், அவர் இந்த முறை 400 இடங்களைத் தாண்டும் என்று கூறியிருந்தார். இந்த முறை நிறைய பேர் என்னை குறைத்து மதிப்பிட்டார்கள். 

எனக்கு ஷேர் மார்க்கெட் அதிகம் புரியாது. ஆனால் இன்றைக்கு ஷேர் மார்க்கெட் பார்த்தீர்களா? நீங்கள் அமலாக்கத்துறை, சி.பி.ஐ ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் இந்தியா பிளாக் உங்களை வீழ்த்திவிடும். இவ்வளவு கொடுமைகளை செய்தும், இவ்வளவு பணம் செலவழித்தும், மோடி மற்றும் அமித்ஷாவின் இந்த ஆணவத்தை, இந்திய அணி வென்றுவிட்டது. மோடி தோற்றுவிட்டார். அயோத்தியில் கூட தோற்றுவிட்டார்கள்.