குளுமையான தட்பவெப்ப நிலைக்கு பெயர்போன கேரளாவில் வெயில் கொடுமை தாங்காமல் மயங்கி விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை நேற்று பதிவாகி உள்ளது. ஆனால் ஈரப்பதம் காரணமாக வெப்பத்தின் தாக்கம் 122 டிகிரிக்கு மேல் உணரப்பட்டுள்ளது.இதனால் இந்த வெப்பம் தாங்காமல் கண்ணூர் மாவட்டம் பையனூரை சேர்ந்த நாராயணன் (67), திருவனந்தபுரம் அருகே பாறசாலையை சேர்ந்த கருணாகரன் (43), பத்தனம்திட்டாவை சேர்ந்த ஷாஜஹான் (55) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 118 பேர்வெப்பத்தால் தோல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்பதால் மதிய நேரங்களில் யாரும் வெளியே வர வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.