A temple elephant that has spoiled the wedding photo shoot

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான குருவாயூர் கோவிலில் கோவில் யானை திடீரென மிரண்டு பாகனை தலைகீழாகத்தூக்கி எறிந்த வீடியோ காட்சிகளும், அதனைக் கண்டு அங்கு திருமண போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருந்த தம்பதிகள் தெறித்து ஓடும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் நிகில், அஞ்சலி என்ற ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. தம்பதிகள் இருவரும் கோவில் வளாகத்திற்குள்ளேயே போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருந்தனர். யானைக்கு முன்னே நின்று தம்பதிகள் இருவரும் போட்டோவிற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது கோவிலுக்குச் சொந்தமான தாமோதரதாஸ் என்ற அந்த யானை கோவிலை நோக்கி நகர்ந்தது. திடீரென மிரண்ட யானை திரும்பி அருகே நடந்து வந்த பாகனை தும்பிக்கையால்தூக்கித்தலைகீழாக எறிந்தது. அந்த நேரத்தில் பாகன்அணிந்திருந்த சட்டை கழன்றதால் யானையின் பிடியிலிருந்து தப்பித்து ஓடினார். அதேநேரம் யானையின் மேலே அமர்ந்திருந்த பாகன் யானையைக் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் யானையானது சாந்தமானது. தற்பொழுது இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment