/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Telangana_fb-750x500.jpg)
கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானாவில் ஆணவக்கொலையால் பலியான பிரனாயின் இறுதி சடங்கு அவரது ஊரில் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பிரனாயின் உடல் டிராக்டரில் வைத்து எடுத்துசெல்லப்பட்டது, அப்போது அவரது உடல் அருகேயெ அவருடைய மனைவி அமர்ந்திருந்தார். ”நீங்கள் பிரனாயை வேண்டுமானாலும் அழிக்கலாம், அவரின் காதலை அழிக்க முடியாது”,”எத்தனை முறை இதுபோன்ற அட்டூழியங்கள் நடக்கும், இந்த அட்டூழியத்தால் எத்தனை பேரை இழக்கபோகிறோம்” என்கிற வரியை தெலுங்கில் ஒரு இளைஞர் பாட, அவருடன் இருக்கின்ற இளைஞர்கள் ஒருசேர அந்த வரியை வலியுடன் பாடினர். இந்த இறுதி ஊர்வலத்தை சிலர் பேஸ்புக் லைவில் சாதி என்னும் அழுக்கால் நடந்த கொடூரம் என்ற பெயரில் மேற்கோளிட்டு காட்டினர். தலித் இயக்கத்தைச் சேர்ந்த சில தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் இதில் கலந்துகொண்டனர்.
தற்போது இந்த ஆணவக்கொலையில் மாஜி எம்எல்ஏ ஒருவர் ஈடுபட்டிருப்பதகாவும் கூறுகின்றனர். அதேபோல அம்ருதாவின் தந்தையும், ”என் மகள் என் பேச்சை கேட்கவில்லை அதனால் என் சொத்தே அழிந்தாலும் பரவாயில்லை என்று கூலிப்படையில் ஆள் வைத்து கொலை செய்தேன்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த கொலையில் முக்கியமாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை பிஹார் மாநிலத்தில் கைது செய்துள்ளனர். இந்த கொலையில் போலிஸாரால் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான இவர் பெயர் ஷர்மா என்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)