Advertisment

இரண்டு தொகுதியிலும் பின்னடைவை சந்தித்த சந்திரசேகர் ராவ்

Chandrasekhar Rao suffered a setback in both the constituencies

Advertisment

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும், பிஆர்எஸ் 42 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும், மற்றவை 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 154 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 72 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக 106 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 76 இடங்களிலும், மற்றவை 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சத்தீஸ்கரில் 45 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

Advertisment

தெலுங்கானாவில் தற்போதைய முதல்வரான பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த சந்திரசேகரராவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கம்மா ரெட்டி, கஜ்வல் ஆகிய 2 தொகுதிகளில் அவர் போட்டியிட்டு இருந்த நிலையில் இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

telungana chandrasekarrao
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe