தெலுங்கு சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் (39) உடல்நலக் குறைவால் இன்று மதியம் உயிரிழந்தார். கடந்த மூன்று வருடங்களாக கல்லீரல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

VENU MADHAV

Advertisment

Advertisment

1996-ல் 'சம்பிரதாயம்' என்ற படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தார். இதுவரை 170 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழிலும் 'என்னவளே', 'காதல் சுகமானது' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2016-ல், 'டாக்டர் பரமானந்தய்யா' ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் வேணு மாதவின் மறைவுக்கு தெலுங்கு ரசிகர்களும், திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.