தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கொத்தக்குடம் மாவட்டத்தில் உள்ள கோத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாச ராவ் (45). இவர் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியை சேர்ந்தவர். கடந்த 3 தினங்களுக்கு முன் இவர் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள எர்ரம்பட்டி பகுதியில் சீனிவாச ராவ் இன்று பிணமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், அவரது உடலில் குண்டுகள் பாய்ந்திருந்தது. அவரது உடல் அருகே இருசக்கர வாகனமும் கிடந்ததாகவும், மாவோயிஸ்டுகள் இவரை கடத்தி கொன்றிருக்கலாம் என தெரிவித்தன. மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளன.