Advertisment

கட்டுக்குள் வராத கரோனா தொற்று... பொதுமுடக்கத்தை மே.30 வரை நீட்டித்த மாநில அரசு!

கதச

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய அரசும் மாநிலங்களுக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன் போன்றவற்றை விமானங்கள், ரயில்கள் மூலம் அனுப்பிவருகிறது.

Advertisment

இரண்டாம் அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளன. சில மாநிலங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு என பல்வேறு முறைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில், தெலங்கானாவில் தற்போது அமலில் உள்ள பொதுமுடக்கம், வரும் 30ஆம்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Advertisment

Corona Lockdown telengana
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe