Advertisment

விபரீதத்தில் முடிந்த ஃபேஸ்புக் நட்பு... 10 ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்...

ஃபேஸ்புக் நண்பரை சந்திக்க சென்ற 10 ஆம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.

Advertisment

telangana school girl missing case

தெலங்கானா மாநிலம் மெகபூப்நகரில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவருக்கும் நவீன் ரெட்டி என்பவருக்கும் சமீபத்தில் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு பெரும் ஃபேஸ்புக்கில் மட்டுமே பேசிக்கொண்டிருந்த நிலையில், நேரில் சந்திப்பது என முடிவெடுத்தனர்.

Advertisment

அதன்படி கடந்த 27 ஆம் தேதி சங்கரயபள்ளி, குடியிருப்புக்கு பகுதிக்கு அருகே உள்ள பாழடைந்த இடத்திற்கு பின்னால் இருவரும் தனியாக சந்தித்துள்ளனர். அப்போது அந்த சிறுமியிடம்நவீன் தவறாக நடக்க முயன்ற நிலையில், அந்த சிறுமி தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த நவீன் அந்த சிறுமியை கீழே தள்ளியுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த சிறுமியின் தலையில் பலமாக அடிப்பட்டுள்ளது.

கீழே விழுந்து வலியால் துடித்த அந்த சிறுமியின் தலையிலிருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே அந்த சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில்மகளை காணவில்லை என அந்த மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து சிறுமியை தேடி வந்தனர். அப்போது சிறுமி நவீனுடன் சென்றது தெரியவந்தது.

பின்னர் நவீனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நடந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் நவீனை கைது செய்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஃபேஸ்புக் நண்பனை நம்பி சென்று பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Facebook telangana
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe