ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து... வெளியான அதிர்ச்சி வீடியோ!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள கச்சிகுடா ரயில்நிலையத்தில், கர்னூலில் இருந்து செகந்திரபாத் நோக்கி சென்று கொண்டிருந்த ஹூண்ட்ரி விரைவு ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அதே தண்டவாளத்தில் எதிரே வந்த புறநகர் பயணிகள் ரயில், அங்கு நின்று கொண்டிருந்த விரைவு ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் புறநகர் ரயிலின் எஞ்சின் ஓட்டுநர் உட்பட 12 பேர் காயமடைந்தனர்.

telangana rail incident cctv footage released peoples shock

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இரண்டு ரயில்களின் எஞ்சின்களுக்கு இடையே சிக்கிக் கொண்ட புறநகர் ரயிலின் ஓட்டுநர், நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு, ஹைதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் ரயிலுக்கு தவறாக சிக்னல் கொடுக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

telangana rail incident cctv footage released peoples shock

ரயில் விபத்து நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் வேகமாக வரும் புறநகர் ரயிலானது, நின்று கொண்டிருந்த ரயில் மீது வேகமாக மோதும் காட்சி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

CCTV footage India RAIL INCIDENT telangana
இதையும் படியுங்கள்
Subscribe