/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Reshma_Nawaz_std.jpg)
தெலங்கானாவின் தாரூர் பகுதியில் தற்கொலை முயற்சி செய்த காதலர்களுக்கு மருத்துவமனையில் திருமணம் நடந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாரூரை சேர்ந்த ரேஷ்மா எனும் 20 வயது பெண்ணும், நவாஸ் என்ற இளைஞனும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே ரேஷ்மா தனது வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லியை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ரேஷ்மா விஷம் குடித்ததை அறிந்த அவரது காதலன் நவாஸும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் இருவரும் அங்குள்ள விகராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர் சிகிச்சைக்குப்பின் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையை கடக்க, ரேஷ்மா தனக்கு நடந்தவற்றை மருத்துவரிடம் கூறியுள்ளார். அதன் பின் அந்த மருத்துவர் இருவரின் பெற்றோர்களிடமும் பேசி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளார். பிறகு பெற்றோர் சம்மதத்துடன் அந்த மருத்துவமனையிலேயே அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)