மக்களவைத் தேர்தலில் இந்திய முழுவதும் அதிக இடங்களை வென்ற பாஜக, தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் வெற்றி பெற்றதன் மூலம் தென்னிந்தியாவில் வலுவான அடித்தளம் அமைத்துள்ளதாக பிரச்சாரம் செய்யப்பட்டது.

Advertisment

modi

ஆனால், சமீபத்தில் கர்நாடகா உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி அடைந்த பாஜக, இப்போது தெலங்கானா மாநில உள்ளாட்சித் தேர்தலிலும் படுதோல்வி அடைந்துள்ளது. தெலங்கானா உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 32 மாவட்ட ஊராட்சிகளையும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியே வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க படுதோல்வி அடைந்துள்ளது.

மாவட்ட ஊராட்சிகளில் மொத்தமுள்ள 538 இடங்களில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி 445 இடங்களையும், காங்கிரஸ் 75 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், பா.ஜ.க.,விற்கு வெறும் 8 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. சுயேச்சைகள் 5 இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

Advertisment

ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கான தேர்தலில் மொத்தமுள்ள 5 ஆயிரத்து 816 இடங்களில் 3 ஆயிரத்து 557 இடங்களை தெலுங்கானா ராஷ்டிர சமிதியும், 1377 இடங்களை காங்கிரசும் கைப்பற்றியுள்ளன. பிற கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் 636 இடங்களை வென்றுள்ளனர். ஆனால் பா.ஜ.க வெறும் 211 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது..