தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக பதவியேற்ற பின் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார். பின்பு பிரதமருக்கு மயில் சின்னம் கொண்ட பரிசைவழங்கினார். அதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அப்போது அவருக்கு செடிக்கன்று ஒன்றை பரிசாக வழங்கினார். மேலும் குடியரசுத்தலைவரையும் ஆளுநர் தமிழிசை சந்திக்க உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.