Advertisment

தெலங்கானா மாநிலத்தின் முதல் ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை சவுந்தரராஜன்! (படங்கள்).

Advertisment

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனை, தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமித்து கடந்த வாரம் குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு தெலங்கானா மாநிலத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ்.சவுகான், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.தெலங்கானா ஆளுநராக பதவியேற்ற பின் தமிழிசை, தனது தந்தை குமரி ஆனந்தன் காலில் விழுந்து ஆசி பெற்றார். மேலும் ஆளுநர் தமிழிசையின் குடும்ப உறுப்பினர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்.

இந்த பதவியேற்பு விழாவில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர். தமிழகத்தின் சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி தேமுதிக கட்சி சார்பில் எல்.கே.சுதீஷ், பிரேமலதா விஜயகாந்த், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார். மேலும் பாஜக கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர். ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தின் முதல் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

oath ceremony Tamilisai Soundararajan governor state telangana India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe