தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனை, தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமித்து கடந்த வாரம் குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் இன்று காலை 11.00 மணிக்கு பதவியேற்பு விழா நடக்கிறது. தெலங்கானா மாநிலத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ்.சவுகான், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/t1111.jpg)
பதவியேற்பு விழாவில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தின் சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்கிறார். மேலும் பாஜக கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர். ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தின் முதல் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us