
மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
டெல்லி மருத்துவமனையில் மூன்று நாட்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் ராம் விலாஸ் பாஸ்வான் இன்று இரவு 8 மணி அளவில் காலமானார். அவரின் இறப்பை அவரது மகன் உறுதிப்படுத்தியுள்ளார். பிகார் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இவரின் இறப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்துக்கு அவர் எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரின் இறப்புக்கு தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை இரங்கல் தெரிவித்துள்ளார். "ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடி நீண்ட காலம் அரசியலில் இருந்தவர்" என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)