தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், அப்துல்பூரமெட் வட்டாட்சியர் லஞ்சம் கேட்டதாகஉயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

telangana government officer passed away

Cognizant

அப்துல்பூரமெட் வட்டாட்சியரான விஜயா ரெட்டி நிலப்பத்திர பதிவுக்காக சதிஷ் என்ற விவசாயியிடம் லஞ்சம் கேட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சனையில், விவசாயி சதிஷ், வட்டாட்சியர் விஜயா ரெட்டி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதில் விஜயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதில் வட்டாட்சியர் விஜயாவை காப்பாற்றும் முயற்சியில் மேலும் இரண்டு பணியாளர்கள் காயமடைந்தனர். பட்டப்பகலில் லஞ்சம் கேட்டதாக பெண் வட்டாட்சியர் எரித்து கொல்லப்பட்டது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.