பெண் தாசில்தார் வீட்டில் ரூ. 93 லட்சம் பணம், 400 கிராம் தங்கம்... கையும் களவுமாக சிக்கிய சம்பவம்...

பணியில் சிறப்பாக செயலாற்றியதற்காக மாநில அரசின் விருதினை வென்ற பெண் தாசில்தார் வீட்டிலிருந்து ரூ.93 லட்சம் பணமும், 400 கிராம் தங்கமும் கைப்பற்றப்பட்ட சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.

telangana government officer arrested by anti bribe police

தெலங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டம், கேஷம்பேட் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார் லாவண்யா. இவர் கடந்த 2017-ல் தெலங்கானா துணை முதல்வரிடம் இருந்து சிறந்த தாசில்தார் என்ற விருதைபெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் விவசாயி ஒருவர் மூலபத்திரத்தை மாற்றுவதற்காக கேட்ட போது, இவரது அலுவலகத்தில் கிராம வருவாய் அதிகாரியாக பணியாற்றும் அந்தையா என்பவர் ரூ. 8 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதில், தாசில்தார் லாவண்யாவுக்கு ரூ.5 லட்சமும் அலுவலகத்தில் பணிபுரியும் மற்றவர்களுக்கு ரூ.3 லட்சமும் தரவேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த விவசாயி லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தந்துள்ளார். அதன் பேரில் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்த லஞ்சஒழிப்பு துறை அதிகாரிகள், விவசாயி 4 லட்சம் பணத்தை அந்தையாவிடம் கொடுக்கும் போது கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் விசாரணை நடைபெற்று, தாசில்தார் லாவண்யா வீட்டிலும் சோதனை நடந்துள்ளது.

இதில் கணக்கில் வராத ரூ. 93.5 லட்சம் ரொக்கம், 400 கிராம் தங்க நகைகள் மற்றும் சில பத்திரங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர். தாசில்தாரின் வீட்டிலிருந்து இவ்வளவு பணம் மற்றும் நகை கைப்பற்றப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bribe telangana
இதையும் படியுங்கள்
Subscribe