Skip to main content

பெண் தாசில்தார் வீட்டில் ரூ. 93 லட்சம் பணம், 400 கிராம் தங்கம்... கையும் களவுமாக சிக்கிய சம்பவம்...

Published on 13/07/2019 | Edited on 13/07/2019

பணியில் சிறப்பாக செயலாற்றியதற்காக மாநில அரசின் விருதினை வென்ற பெண் தாசில்தார் வீட்டிலிருந்து ரூ.93 லட்சம் பணமும், 400 கிராம் தங்கமும் கைப்பற்றப்பட்ட சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.

 

telangana government officer arrested by anti bribe police

 

 

தெலங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டம், கேஷம்பேட் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார் லாவண்யா. இவர் கடந்த 2017-ல் தெலங்கானா துணை முதல்வரிடம் இருந்து சிறந்த தாசில்தார் என்ற விருதை பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் விவசாயி ஒருவர் மூலபத்திரத்தை மாற்றுவதற்காக கேட்ட போது, இவரது அலுவலகத்தில் கிராம வருவாய் அதிகாரியாக பணியாற்றும் அந்தையா என்பவர் ரூ. 8 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதில், தாசில்தார் லாவண்யாவுக்கு ரூ.5 லட்சமும் அலுவலகத்தில் பணிபுரியும் மற்றவர்களுக்கு ரூ.3 லட்சமும் தரவேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த விவசாயி லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தந்துள்ளார். அதன் பேரில் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்த லஞ்சஒழிப்பு துறை அதிகாரிகள், விவசாயி 4 லட்சம் பணத்தை அந்தையாவிடம் கொடுக்கும் போது கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் விசாரணை நடைபெற்று,  தாசில்தார் லாவண்யா வீட்டிலும் சோதனை நடந்துள்ளது.

இதில் கணக்கில் வராத ரூ. 93.5 லட்சம் ரொக்கம், 400 கிராம் தங்க நகைகள் மற்றும் சில பத்திரங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர். தாசில்தாரின் வீட்டிலிருந்து இவ்வளவு பணம் மற்றும் நகை கைப்பற்றப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நில உட்பிரிவு மாற்ற லஞ்சம்; நில அளவையாளர் கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
3000 bribe to change land subdivision; Land surveyor arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.

வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.

இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

Next Story

ஒயின் ஷாப்புகளில் அதிகவிலை! ஆத்திரத்தில் பெட்டி பெட்டியாக அள்ளிச்சென்ற பொதுமக்கள்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
liquor shops are selling liquor bottles at high prices, causing public dissatisfaction in Telangana

தெலங்கானாவில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறி, நான்கு ஒயின் ஷாப்புகளை முற்றுகையிட்ட பொதுமக்கள், கடைகளில் இருந்த ரூ.22 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை அள்ளிச்சென்றனர். தெலங்கானா, பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம், தெகுலப்பள்ளியில் MRP விலையைவிட ரூ.20 முதல் ரூ.30 வரை அதிக விலைக்கு, மது விற்பனையாளர்கள் சிண்டிகேட் அமைத்து மது விற்பதாக  மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மதுக்கடைகள் முன்பு திரண்டு, நான்கு ஒயின்ஷாப்புகளில்  இருந்த  மதுபானங்களை அள்ளிச் சென்றனர். பொது மக்கள் பலரும் மது பாட்டில்களை அள்ளிச்சென்ற நிலையில், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் மதுபாட்டில்களை எடுத்துச்சென்றனர். இதனை ஊழியர்கள் தடுக்க முயன்றும் முடியாததால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

liquor shops are selling liquor bottles at high prices, causing public dissatisfaction in Telangana

இச்சம்பவத்தின்போது, பெரும்பாலும் பெண்களே மதுபாட்டில்களை எடுத்துச் சென்றனர். இதனையடுத்து, டிஎஸ்பி சந்திரபானு தலைமையில் அங்கு வந்த காவல்துறையினர், கடை உரிமையாளர்களின் புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.  மொத்தத்தில் சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பொது மக்கள் அள்ளிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.