Advertisment

பெண் மருத்துவர் வழக்கின் குற்றவாளி கையில் இருந்த துப்பாக்கி... புகைப்படங்கள் வெளியீடு...

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேர் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், என்கவுண்டர் செய்யப்பட்ட குற்றவாளியின் கையில் துப்பாக்கி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

telangana encounter photos

கடந்த 27ஆம் தேதி ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிஸ் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற நான்கு பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், இன்று அந்த நான்கு பேரும் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் என்கவுண்டர் செய்யப்பட்ட ஒரு குற்றவாளியின் கையில் துப்பாக்கி இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment
priyanka reddy telangana
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe