கடந்த 27- ஆம் தேதி ஐதராபாத்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற நான்கு பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கொடூர பாலியல் கொலை சம்பவம்தெலுங்கானா மட்டுமல்லாது இந்தியாவையே மிண்டும் உலுக்கியது.

Advertisment

telangana

மக்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில்கடந்த டிசம்பர் 6 ஆம் தேதிநால்வரும் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்.இந்நிலையில் என்கவுன்ரில் கொல்லப்பட்ட 4 பேர் உடலையும் மறுபிரேத பரிசோதனை செய்ய தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரின் உடலும் ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனை பிணவறையில் உள்ளது.