பெற்ற மகனை தாய், தந்தைஇருவரும் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
தெலங்கானா மாநிலத்தின் வாரங்கல் பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவர் தனது பெற்றோர், மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். போதை பழக்கத்துக்கு அடிமையானதால், வீட்டிலும், ஊரில் உள்ள மக்களிடமும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் மகேஷ். இதன் காரணமாக ஏற்பட்ட சண்டையால் 2 மாதங்களுக்கு முன் அவரது மனைவியும் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, தனது பெற்றோரை அடித்து துன்புறுத்தியுள்ளார் மகேஷ். மேலும் தந்தையின் பெயரில் இருக்கும் சொத்துக்களையும் தனது பெயருக்கு மாற்றி தரும்படி தகராறு செய்துள்ளார்.
தினமும் மகன் குடித்துவிட்டு வந்து சண்டையில் ஈடுபடுவதால் விரக்தியடைந்த அவரது பெற்றோர், செவ்வாய்கிழமையன்று இரவு மகேஷ் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளனர். "செவ்வாய்க்கிழமை இரவு, மகேஷ் குடிபோதையில் வந்து தனது பெற்றோரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனை தாங்கிக்கொள்ள முடியாத அவர்கள், இருவரும் சேர்ந்து மகேஷ் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளனர்" என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.