ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேர் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், என்கவுண்டர் செய்யப்பட்ட போது என்ன நடந்தது என்பது குறித்து காவல் ஆணையர் சஜ்ஜானார் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

telangana commissioner about telangana encounter

கடந்த 27ஆம் தேதி ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிஸ் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட இந்த வழக்கில் தொடர்புடைய முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற நான்கு பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், இன்று அந்த நான்கு பேரும் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த என்கவுண்டர் குறித்து பேட்டியளித்த காவல் ஆணையர் சஜ்ஜானார், "டிசம்பர் 4 ஆம் தேதி 4 பேரையும் காவலில் எடுத்து, அடுத்த 2 நாட்கள் விசாரணை நடத்தினோம். அப்போது, பெண் மருத்துவரின் செல்போன் உள்ளிட்ட பொருட்களை வைத்திருப்பதாக அவர்கள் கூறியதால் அதை எடுக்க அழைத்து வந்தோம். 4 பேரையும் அழைத்துச் சென்ற போது 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக உடன் சென்றிருந்தனர். அப்போது, சென்ன கேசவலு மற்றும் முகமது ஆரிஃப் ஆகியோர் போலீசாரின் துப்பாக்கியை எடுத்து மிரட்டினர். நால்வரும் நாங்கள் சொல்லச் சொல்ல கேட்காமல் எங்களை தாக்கினர்.

Advertisment

இதில், இரண்டு போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. அப்போதுகூட நாங்கள் அமைதியான முறையில் சரணடைய வேண்டும் என கூறினோம். அதிகாலை 5.45 மணி முதல் 6.15 க்குள் என்கவுண்டர் சம்பவம் நடந்தது. இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது. காயம் அடைந்த 2 போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து அரசு மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் விளக்கம் அளிக்கப்படும்" என தெரிவித்தார்.