Advertisment

டிசம்பர் 7இல் தெலங்கானா முதல்வர் பதவியேற்பு!

Telangana Chief Minister sworn in on December 7

Advertisment

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல்கள் நடந்து முடிந்தன. இதனையடுத்து மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது. மிசோரத்திற்கு மட்டும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்த சூழலில் தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 64 இடங்களையும், பிஆர்எஸ் 39 இடங்களையும், பாஜக 8 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களையும், இந்தியகம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் தெலங்கானா மாநில முதலமைச்சராக, தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்பார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார். இவர் டிசம்பர் 7 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இவருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். முதல் முறையாகத்தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது குறிப்பிடத்தக்கது.

telangana
இதையும் படியுங்கள்
Subscribe