ADVERTISEMENT

தேஜஸ்வி யாதவிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை!

10:23 AM Apr 12, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

பீகார் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய ரயில்வே துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். அப்போது ரயில்வே பணி நியமனத்தின் போது பீகாரில் நிலங்களை வாங்கிக் கொண்டு பலருக்கு பணி நியமனம் செய்ததாகக் கூறி லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் தனித்தனியே விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் லாலு பிரசாத்தின் மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் நேற்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். அங்கு தேஜஸ்வி யாதவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். கடந்த மாத இறுதியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேஜஸ்வி யாதவிடம் விசாரணை நத்தியது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT