சர்ச்சையில் சிக்கிய நாட்டின் முதல் தனியார் ரயில்...

இந்தியாவின் முதல் தனியார் பயணிகள் ரயில் சேவை கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இந்த ரயிலில் விதிகளை மீறி அதிக அளவிலான கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

tejas express controversy on high ticket prize

உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் இருந்து டெல்லி வரை செல்லும் இந்த ரயில் 550 கிலோமீட்டர் பயணத்தை சுமார் 6.15 மணிநேரத்தில் முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டு இயங்கி வருகிறது. இதே போல டெல்லி, லக்னோ இடையே செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் AC Executive வகுப்புக்கான கட்டணம் 1,855 ரூபாயாகவும், AC Chair Car-க்கான கட்டணம் 1,165 ரூபாயாகவும் உள்ள நிலையில், தேஜஸ் ரயிலில், இவை முறையே 2,450 ரூபாயகவும் மற்றும் 1, 565 ரூபாயாகவும் உள்ளது.

தனியார் ரயிலாக இருந்தாலும், இந்த ரயிலுக்காக கட்டணங்களை நிர்ணயிக்கும் உரிமை மத்திய அரசுக்கே உள்ள நிலையில், IRCTC விதிகளை மீறி இந்த ரயிலில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதே குற்றச்சாட்டினை ரயில்வே உயர் அதிகாரிகள் சிலரும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Indian Railway IRCTC tejas express
இதையும் படியுங்கள்
Subscribe