பாதுகாப்புப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் சரியில்லை என கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதால் தேஜ் பகதூர் யாதவ் என்ற பாதுகாப்புப்படை வீரர் கடந்த 2017-ம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இந்நிலையில் தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவருக்கு எதிராக தேஜ் பகதூர் யாதவ் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனையடுத்து சமாஜ்வாடி கட்சி தேஜ் பகதூர் யாதவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தது. இந்நிலையில் வேட்பு மனுவில் தனது பணி நீக்கம் தொடர்பான சில ஆவணங்களை சமர்பிக்க தவறியதால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடப்போவதாக அறிவித்த தேஜ் பகதூர் யாதவ், இன்று உச்சநீதிமன்றத்தில் அதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளார்.