உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் அருகில் உள்ள ரியானவ் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சிங் யாதவ். இவர் தாய்லாந்தில் வேலை செய்கிறார். இவர் மனைவி கீதா. தாய்லாந்தில் இருக்கும் கணவருடன் அடிக்கடி போனில் பேசுவது வழக்கம். இருவரும் மணிகணக்காய் பேசுவது வழக்கம். பேச்சு சுவாரஸ்யத்தில், அப்படியே வீட்டில் இருந்த படுக்கையறைக்குச் சென்றுள்ளார் கீதா. அப்போது பெட்டில், இரண்டு பாம்புகள் விளையாடிபடி கிடந்தன. இதைக் கீதா கவனிக்கவில்லை. கணவருடன் பேசியபடியே, அந்த பாம்புகளின் மீது அப்படியே அமர்ந்துவிட்டார். இதையடுத்து ஆவேசம் கொண்ட அந்தப் பாம்புகள் அவரைக் கொத்தின. உடனடியாக மயங்கிய அவரை, வீட்டில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/snake_0.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அவரது குடும்பத்தினர், வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, அந்தப் பாம்புகள் அப்போதும் பெட்டிலேயே இருந்துள்ளன. இதையடுத்து அவர்கள், அந்த இரண்டு பாம்புகளையும் அடித்தே கொன்றுள்ளனர். பாம்புகள் இனச் சேர்க்கையில் இருந்தபோது, அந்தப் பெண் அதன் மீது அமர்ந்ததால், அவை கடித்துள்ளன என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)