Advertisment

மது அருந்திவிட்டு மாணவர்களை அடித்த தலைமை ஆசிரியர் கைது!

தலைமையாசிரியர் ஒருவர் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்து மாணவர்களை திட்டிய சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கேந்திரபரா ராஜ்நகரை சேர்ந்தவர் ரவி கிருஷ்ணா. இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தலைமையாசிரியராக இருந்து வருகிறார். இவர் அதீத குடிப்பழக்கம் உள்ளவர். இந்நிலையில் நேற்று மது அருந்திய அவர், அப்படியே பள்ளிக்கு வந்து மாணவர்களிடம் பள்ளியை சுத்தம் செய்ய சொல்லியுள்ளார்.

Advertisment

அப்போது மாணவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்ததால் அவர்களை கெட்ட வார்த்தைகள் சொல்லி தலைமை ஆசிரியர் திட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் மாணவர்களை அவர் அடித்ததால் அவர்கள் அங்கிருந்து ஓடி தங்களின் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறினார்கள். அவர்கள் இதுக்குறித்து காவல் நிலையத்தில் புகார் கூறவே காவலர்கள் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
teachers
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe