Advertisment

"தயவு செய்து இதையாவது திரும்ப கொடுத்து விடுங்கள்.." திருடனுக்கு கடிதம் எழுதிய ஆசிரியர்கள்!

பள்ளியில் திருடிய திருடனுக்கு ஆசிரியர்கள் இணைந்து கடிதம் எழுதிய நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஏழு மாதங்களுக்கு முன்பு ஒரு திருட்டு சம்பவம் நடைபெற்றது. இதில் 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சிசிடிவி கேமராக்களை கொள்ளையர்கள் திருடி சென்றனர். இதுதொடர்பாக காவல் துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த முறை ஆசிரியர்களுக்கு சம்பளம் போடும் டிஜிட்டல் கையெழுத்து அடங்கிய பெண் டிரைவ்களையும், சில கணினி உதிரி பாகங்களையும் திருடர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.

Advertisment

இந்நிலையில், இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஆசிரியர்கள் திருடனுக்கு சமூக வளைதளம் மூலம் கடிதம் எழுதியுள்ளார்கள். அதில், " அன்புள்ள திருடனுக்கு நீ பள்ளியில் திருடியது ரொம்ப தவறானது. போன முறை நீ திருடி சென்றதே தவறான நிலையில் மீண்டும் பள்ளியில் திருடி உள்ளாய். இந்த முறை நீ ஆசிரியர்களுக்கு சம்பளம் போடும் டிஜிட்டல் கையெழுத்து அடங்கிய பென் ட்ரைவ்களை திருடி சென்றுள்ளார். அதனால் உனக்கு ஏதாவது பயன் உண்டா? தயவு செய்து அதையாவது மீண்டும் பள்ளியில் கொண்டு வந்து போட்டுவிடு, நீ இந்த திருட்டு தொழிலை கைவிடுவது உன்னுடைய எதிர்காலத்திற்கு நல்லது" என்றுஅந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

letter
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe