ஒய்யாரமாக வகுப்பில் தூங்கும் ஆசிரியை... விசிறியால் வீசிவிடும் மாணவி... வைரலாகும் வீடியோ! 

The teacher who sleeps in the class... The video goes viral!

பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் முறையற்று நடத்தப்படுவது தொடர்பாக விடியோக்கள், புகைப்படங்கள் அவ்வபோது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும். பள்ளி கழிவறையை மாணவர்களே சுத்தம் செய்வது, ஆசிரியர்களின் உடைமைகளைப் பள்ளி மாணவர்கள் தூய்மைப்படுத்துவது போன்ற காணொளிகள் வெளியாகி அதிர்ச்சியையும்கண்டனத்தையும் பெறும்.

அந்த வகையில் பள்ளியில் ஆசிரியை தூங்கிக்கொண்டிருக்க மாணவி ஒருவர் விசிறியால் விசிறிவிடும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள கதர்வா எனும் பகுதியில் உள்ள பள்ளியில் பவிதாகுமாரி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த நான்காம் தேதி பள்ளி வேலை நேரத்தில் வகுப்பறையில் ஒய்யாரமாக அமர்ந்து காலை நீட்டிக்கொண்டு உறங்க, மாணவி ஒருவர் நின்றுகொண்டு விசிறியால் வீசுகிறார். இந்த காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியான நிலையில் அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது. மேலும் அந்த ஆசிரியை மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Bihar student
இதையும் படியுங்கள்
Subscribe