Advertisment

ஆசிரியைக்கு மாணவர் செய்த மசாஜ்; வீடியோ வெளியாகி பரபரப்பு!

The teacher made the student massage in rajasthan

Advertisment

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரின் கர்தார்புரா பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில், ரேகா சோனி என்ற ஆசிரியை ஒருவர் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், ரேகா சோனி தனது வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவர் தனக்கு மசாஜ் செய்ய வைக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மாணவர் ஒருவர், மற்ற மாணவரின் கைகளை பற்றிக் கொண்டு ஆசிரியை ரேகா சோனியின் கால்களை மிதித்து மசாஜ் செய்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து, மாணவரை தனக்கு மசாஜ் செய்யும்படி செய்த ரேகா சோனியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.

school Massage jaipur Rajasthan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe