/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/utses.jpg)
உத்தரபிரதேச மாநிலம், முசாபர்நகரில் உள்ள நியூ மண்டி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஆண்டு தோறும் விழா நடைபெறும் இந்த பள்ளியில், ஆண்டு விழா தினம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு வருகை தந்த மாணவர் ஒருவருக்கும், உடற்கல்வி ஆசிரியர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆசிரியர், அந்த மாணவரை சரமாரியாக அறைந்து தாக்கியுள்ளார். இதனை கண்ட மாணவரின் தாயும், சகோதரியும் ஆசிரியர் பிடியில் இருக்கும் மாணவரை விலக்கி கூட்டிச் செல்ல முயற்சி செய்கின்றனர்.
ஆனாலும், அந்த மாணவரை தொடர்ந்து அவர் தாக்கியுள்ளார். ஆசிரியரை தடுக்கும் முயற்சியில், தாயும் சகோதரியும் சேர்ந்து அவரை அடித்தனர். மேலும், தாங்கள் போட்டிருந்த காலணியை எடுத்து ஆசிரியரை தாக்கினர். இதனால், அந்த இடமே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, அந்த இடத்தில் இருந்த மற்ற ஆசிரியர்களும் பொதுமக்களும் தலையிட்டு இந்த மோதலை தடுத்து நிறுத்தினர். இந்த மோதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோவை ஆய்வு செய்து, சம்பவ இடத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)